ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் திறக்கப்படும் மதுக்கடையை மூட ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், அந்தியூர் வரட்டுப்பள்ளம் பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும், எஸ்.ஐ.ஆர். நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.