ஈரோடு மாவட்டம், அந்தியூர் மத்திய, வடக்கு, தெற்கு ஒன்றிய அத்தாணி பேரூரில் திமுக சார்பில் நடைபெற்ற திராவிட பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில், வாலிபால் மற்றும் ஓட்டப்பந்தயங்களில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட கழக செயலாளர் என். நல்லசிவம் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் அந்தியூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நாகேஸ்வரன், அத்தாணி பேரூர் கழக செயலாளர் செந்தில் கணேஷ் மற்றும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.