பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நத்தக்காடையூர் விவேகம் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர், தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் மற்றும் சிறப்பு விருந்தினர்களான காவல்துறை ஆய்வாளர் சிவகார்த்திகா, உதவி காவல்துறை ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள், முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி