அந்தியூரில் நடைபெற்ற கால்நடை சந்தையில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. காங்கேயம் காளை மாடு ஜோடி ₹75,000, கொங்கு காளை மாடு ஜோடி ₹60,000, நாட்டு பசு மாடு ₹40,000, எருமை மாடு ₹50,000, ஜெர்சி பசு மாடு ₹30,000, சிந்து பசு மாடு ₹25,000, கன்றுக்குட்டி ₹5,000 என பல்வேறு விலைகளில் விற்பனையானது. மொத்தம் ₹1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டன.