5 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி டிஎன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 5 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அத்தாணி - பவானி - சத்தி சாலையில் டிஎன் பாளையம் முதல் பங்களாப்புதூர் வரை 2 கி.மீ. தார் சாலை அமைத்தல், பெட்டி பாலம் அமைத்தல், மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளை அந்தியூர் எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சிவபாலன் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி