பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சுண்டப்பூர் மலை கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக கிராமத்தை விட்டு வெளியே வர கரடுமுரடான மண்சாலையே உள்ளது. மின் வசதி இல்லாததால் மாலை 6 மணிக்கு மேல் அப்பகுதியில் செல்வது கடினமாக உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, சாலை வசதி மற்றும் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.