ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நவம்பர் 10 ஆம் தேதி அன்று பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி. வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு உதவி ஆணையர் சுகுமார், உதவி செயற்பொறியாளர் காணீஸ்வரி, ஆய்வாளர் சிவமணி ஆகியோர் கோவிலில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கல் தரை தளம், விமானத்திற்கு பஞ்சவர்ணம் பூசுதல், புதிய வசந்த மண்டபம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து செல்லீஸ்வரர் கோவிலிலும் ஆய்வு நடத்தப்பட்டது.