அந்தியூரில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் பச்சம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி, மதுபானக் கடையை நிரந்தரமாக மூடவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தியூர் தாசில்தாரிடம் பச்சம்பாளையம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.