அந்தியூர் அருகே பட்லூர் பெருமாள் கரடு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இன்று காலை 9:30 மணியிலிருந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த வெள்ளி திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சாலை மறியல் நடைபெற்று வருகிறது.