அந்தியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரம்மதேசம் பகுதியில் இருந்து புதுகரடிநாயக்கனூர் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இத மதுக்கடையை நிரந்தரமாக அகற்றக் கோரி, புதுகரடிநாயக்கனூர் பகுதி பொதுமக்கள் அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் சாலையில் உள்ள பிரம்மதேசம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பிரம்மதேசம் புதூர் பகுதியிலும் அமைந்திருந்த அரசு மதுபான கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.