அரசு மதுபான கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பவானி அருகே பூனாட்சி அட்டவணைப்புதூர் முகாசி புதூர் பகுதி பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி நேற்று நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர் செல்லும் சாலையில் பூனாச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கருப்புசாமி, அந்தியூர் தாசில்தார் இளஞ்செழியன் மற்றும் ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரகுநாதன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுக்கு தெரிவித்து அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி