அந்தியூரில் அம்மாபேட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் இன்று மதியம் 12 மணியளவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் நிகழ்வதாகவும் கூறி, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்தக் கடையை அகற்ற வலியுறுத்தினர். இதனால், மதியம் 12 மணி முதல் 1 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.