ஈரோடு: வாகன சோதனையில் 192 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் பர்கூர் அருகே சோதனை சாவடியில் பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு ஆட்டோவில் இருந்து முருகன் (47) என்பவர் அரசு அனுமதி இன்றி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 192 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். மேலும், முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி