குடிநீர் வசதி வேண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாலா கோவில் தோட்டத்தில் வசிக்கும் 60 குடும்பங்களுக்கு கடந்த 30 நாட்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால், கிராம மக்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரட்டுப்பாளையம், ஆப்பக்கூடல் பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதாவிடம் மனு அளித்துள்ளனர். குடிநீர் பற்றாக்குறையால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி