அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதால், ஏழு கலசங்கள் அகற்றப்பட்டு பால் ஆலயம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பணிகள் முடிந்ததும் கலசங்கள் மீண்டும் பொருத்தப்பட்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.