அந்தியூர் அருகே சிந்தாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (68) டூ வீலரில், பிரம்மதேசம் அருகே பெட்ரோல் நிரப்பச் சென்றார். அப்போது, செங்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (19) என்பவர் பைக்கில் நேருக்கு நேர் மோதியதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜ்குமார் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.