ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குருவரெட்டியூர், கல்லகாட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த 45 வயது கூலி தொழிலாளி குணசேகரன், கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. வெள்ளிக்கிழமை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்தார். குணசேகரன் உயிரிழந்ததை அடுத்து அப்பகுதியில் மருத்துவத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.