அந்தியூர் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தில் எம்எல்ஏ ஆய்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டிடத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகின்ற 27 ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக கட்டிடத்தினை திறந்து வைக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பிரகாஷ், மின்சார வாரிய கோட்ட பொறியாளர் அங்கப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி