அந்தியூரில் விவசாயிகளுக்கு அமைச்சர் பட்டா வழங்கினார்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று விவசாயிகளுக்கு நிபந்தனை பட்டாக்களை நீக்கி அயன் பட்டாக்களாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 113 விவசாயிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஏ ஜி வெங்கடாசலம் எம்எல்ஏ மற்றும் சந்திரகுமார் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சு முத்துசாமி கலந்துகொண்டு பட்டாக்களை வழங்கி தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார். அரசு அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி