அந்தியூர்: சந்திய பாளையத்தில் மாசி தேரோட்டம்

அந்தியூர் அருகே சந்திய பாளையத்தில் நடைபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசி தேர் திருவிழாவில், காமாட்சியம்மன், நடராஜர், அங்காள பரமேஸ்வரி அம்மன் தெய்வங்கள் தேரில் அலங்கரிக்கப்பட்டு, மயான கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேட்டைக்கிடா காணிக்கை செலுத்தினர். அவை பலியிடப்பட்டு, கோயில் நிர்வாகத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டன. பின்னர், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி