அந்தியூர்: கஞ்சா வைத்திருந்த நபருக்கு 3 ஆண்டு ஜெயில்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சின்னத்தம்பி பாளையத்தில், தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த கருப்பையன் (45) என்பவர் விற்பனைக்காக 4 கிலோ கஞ்சா வைத்திருந்த நிலையில், அந்தியூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை கோவையில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி