அந்தியூர் அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக செம்மண் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் பிரம்மதேசம் வேம்பாரி பெத்தாரம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியிலிருந்து மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தியபோது, ஓட்டுநர் தப்பி ஓடினார். லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.