அதனைத் தொடர்ந்து கிரிஜம்மன் நந்தவனத்தோப்பில் இருந்து மேளத்தாளத்துடன் சுவாமி ஆபரணங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பது ஐதீகம் என்பதால் பெண்கள் 2 கி.மீ தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாறைக்குகையில் சுயம்புவாக லிங்கம் நிலைகொண்டுள்ளதால் லிங்கத்துக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன சுவாமிக்கு சிறப்பு அலங்காரத் தீபாரதனை நடைபெற்றது. கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டு மலர்கள் தூவப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆராவாரத்துடன் பூசாரி மட்டும் குண்டம் இறங்கினார். பூசாரியை தவிர பக்தர்கள் எவரும் குண்டம் இறங்கக்கூடாது என்பது ஐதீகம் என்பதால் ஆண் பக்தர்கள் குண்டத்தை தொட்டு வழிபட்டனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!