தேர்வுக் குழுவைச் சேர்ந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் மதிய உணவு அலுவலர் ரமேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் பூங்கோதை, வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மோகன வித்யா, தாய் சேய் நல அலுவலர் டாக்டர் வித்யா ஆகியோர் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விண்ணப்பித்திருந்தவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்த்து நேர்முகத் தேர்வில் ஈடுபட்டனர்.
14 காலிப் பணியிடங்களுக்கு மொத்தம் 288 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேர்முகத் தேர்வையொட்டி காமராஜர் வீதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.