அரசு மருத்துவமனையில் கால்நடை பராமரிப்பு துறையினர் ஆய்வு

அந்தியூர் அரசு மருத்துவமனையில் ஒரு வாரமாக ஏழு காகங்கள் இருந்ததால், பறவை காய்ச்சல் பரவுமோ என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் கோழி நோய் ஆராய்ச்சி ஆய்வுக்கூட இயக்குநர்கள் இன்று மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டதுடன், யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி