ஈரோடு: மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே முகாசி புதூர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி (35) என்பவர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி கௌசல்யா கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த சின்னத்தம்பி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி