ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இன்று மதியம் 2 மணியளவில் மலைப்பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சில இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பதிவாகியுள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை வானம் இருண்டு காணப்பட்டது. இந்த மழையால் தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.