அந்தியூரில் நலம் காக்கும் மருத்துவ முகாம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் பலத்துறை உயர் சிறப்பு மருத்து முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டன. டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் இதய நோய், பொது மருத்துவம், சர்க்கரை நோய், புற்றுநோய் பரிசோதனை, கண் மருத்துவம், சித்த மருத்துவம் என பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி