அந்தியூரில் குண்டம் திருவிழா நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மொடக்குறிச்சியனூரில் தேவி கருமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் 40 அடி நீளம் கொண்ட குண்டத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை பயபக்தியுடன் கையில் பிரம்பு ஏந்தி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இளைஞர்கள் அழகு குத்தியும், பெண்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, முக்கிய வீதிகளில் தேவி கருமாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா நடைபெற்றது. வீதிகளில் பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி