அந்தியூரில் இருந்து திருப்பதிக்கு அரசுப் பேருந்து

ஈரோடு மாவட்டம் அந்தியூரிலிருந்து திருப்பதிக்கு அதிக அளவில் பக்தர்கள் சென்று வருவதால், நேரடி அரசு பேருந்து இயக்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, அதிநவீன பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நாள்தோறும் இரவு 9 மணிக்கு அந்தியூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு திருப்பதி சென்றடையும். திருப்பதியிலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அந்தியூர் திரும்பும். இந்தப் பயணத்திற்கான கட்டணம் ரூ. 455 ஆகும்.

தொடர்புடைய செய்தி