ஈரோடு: கனரா வங்கியின் மூலம் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், படித்த இளைஞர் இளம்பெண்களுக்கு இலவசமாக சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் பயிற்சி அளிக்க உள்ளது. இந்த பயிற்சி டிசம்பர் 8 முதல் டிசம்பர் 22, 2025 வரை 13 நாட்கள் நடைபெறும். பயிற்சி, சீருடை, உணவு அனைத்தும் இலவசம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இதில் பங்கேற்கலாம். முன்பதிவு அவசியம்.

தொடர்புடைய செய்தி