ஈரோடு மாவட்டம் அந்தியூரில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் தலைமையில், திமுக ஒன்றிய அலுவலகம் மற்றும் காந்தி மைதானத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.