அந்தியூர் அருகே கெட்டி சமுத்திரம் கிராமத்தில் உள்ள ஆதிரெட்டியூர் சித்தர் காட்டில் அமைந்துள்ள அருள்மிகு மகாசக்தி ஆலயத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறும் குண்டம் திருவிழா நேற்று பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. வருகின்ற 17 ஆம் தேதி பாலாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து ஸ்ரீ மகா சக்திக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் திறக்கப்பட்டு, 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை குண்டம் திருவிழா நடைபெறும். இதில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.