ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் வனத்தீயை தடுப்போம் வனங்களை காப்போம் திட்டத்தின் கீழ் ஐந்தாம் நாள் நிகழ்வாக, தட்டக்கரை, ஊசிமலை, துர்ச்ணாம்பாளையம் மற்றும் பர்கூர் கிராம மக்களுக்காக பர்கூர் பேரூந்து நிறுத்தத்தில் வனத்தீ தடுப்பு, வனங்கள் காப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி வைத்திருப்பது, கன்னி வலை, அவுட் காய் வைப்பது, விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சுவது, வனப்பகுதியில் புதிய புல் விளைவிக்க தீ வைப்பது போன்றவை சட்டப்படி குற்றம் என்றும், அதற்கான தண்டனைகள் குறித்தும் விளக்கப்பட்டது.