ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சின்ன குரும்பபாளையம் பகுதியில் பச்சா கவுண்டர், முனிராஜ், பெரியசாமி ஆகியோருக்கு சொந்தமான சுமார் 12.30 ஏக்கர் பரப்பளவிலான கரும்புக்காடுகளில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.