இதனால் காரின் உள்ளே இருந்த யுவராஜ் வெளியே வர முடியாமல் தண்ணீருக்குள் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து நடந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி காரையும், யுவராஜையும் மீட்க முயற்சியில் ஈடுபட்டனர். 50 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இரவு 11 மணி வரை தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பவானிசாகரில் இருந்து 4 மீனவர்களை வரவழைத்தனர். இவர்கள் 4 பேரும் நீச்சலில் கைதேர்ந்தவர்கள்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி