இதில் பங் கேற்பதற்காக ஈரோட்டில் இருந்து விடுதலை சிறுத்தை கள் கட்சியினர் புதன்கிழமை மதியம் புறப்பட்டுச் சென்றனர். அப்போது மதுவை ஒழிக்க வலியுறுத்தி குப்பைத் தொட்டியில் மதுவை ஊற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ். எம். சாதிக் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலா ளர் வி. கமலநாதன், ஈரோடு மாவட்ட மேலிட பொறுப் பாளர்கள் சுசிகலையரசன், ஆல்ட்ரின் ராஜேஷ்குமார், துரை, வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு, சேலம் சிஎஸ்ஐ திருமண்டல செயலா ளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள் ளப்பட்டது. போராட் டத்தில் மதுவை குப்பைத் தொட்டியில் ஊற்றி பெண்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த போராட்டத்துக்காக காலி மதுபுட்டிகளில் நிறமேற்றிய தண்ணீர் சேர்க்கப்பட்டு மதுவைப் போல தயார் செய்யப்பட்டிருந்தது.