பனை விதைகள் நடும் பணியினை ஈரோடுகலெக்டர் தொடங்கி வைத்தார்

சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பவானி, கீழ்வாணி உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பனை விதைகள் நடும் பணி இன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி இதில் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டு பணியை தொடங்கி வைத்தார். பனை மரங்கள் பல்வேறு நன்மைகளை அளிப்பதாகவும், குறிப்பாக அதிக பனை மரங்கள் இருக்கும்போது மழை அளவு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி