நேற்று காலை 9:10 மணிக்கு அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து மேட்டூர் நோக்கி சென்ற பேருந்து, அண்ணாமடுவு பிரிவில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்ற ஓட்டுநர் ராஜா தற்போது நலமுடன் உள்ளார். அவரை உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் மாற்றுப் பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.