மலைவாழ் கிராமங்களுக்கு குடிநீர் வசதி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பர்கூர் மலை கிராமத்தில் தாளகரை மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து, பைப் லைன் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திட அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்துகொண்டு பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மேலும், தாளக்கரை பகுதியில் உள்ள சமுதாய கிணறு பராமரிப்பு பணிகளையும் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், சித்தலிங்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி