ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி தாமரைக்கரை பேருந்து நிறுத்தத்தில் இன்று திமுக பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்ட திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.