அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 1142 மூட்டை பருத்திகள் விற்பனை செய்யப்பட்டன. ஒரு கிலோ பருத்தி குறைந்தபட்சம் ரூ. 77.51 முதல் அதிகபட்சமாக ரூ. 86.91 வரை விலை போனது. மொத்தம் ரூ. 25 லட்சத்து 60 ஆயிரத்திற்கு பருத்திகள் விற்பனை செய்யப்பட்டன.