அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஜூன் 1 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மாசி பட்ட பருத்தி ஏலம் நடைபெற உள்ளது. இதில் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது பருத்தியை அதிகாலை நேரத்தில் பறித்து, உலர்த்தி, ரக வாரியாகப் பிரித்து, சுத்தமாக கொண்டு வந்து உரிய விலையைப் பெற்றுச் செல்லுமாறு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.