அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்தியூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தாக்குதல்களை கண்டித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆறுமுகம் பேசினார். நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.