ரத்த தானம் செய்த மான மாணவர்களுக்கு சான்றிதழ்

அந்தியூர் வட்டார பர்கூர் மற்றும் ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட மலைவாழ் கர்ப்பிணி தாய்மார்களுக்காக, அந்தியூர் கலைக் கல்லூரியில் சிறப்பு இரத்ததான முகாம் இன்று அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தன்னார்வத்துடன் இரத்ததானம் செய்தனர். இரத்ததானம் செய்த அனைத்து மாணவ, மாணவர்களுக்கு அந்தியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி