ஈரோடு மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாம் சிறப்பாக நடந்தது. இதில் சிறப்பாக பணியாற்றிய அந்தியூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பாராட்டு தெரிவித்தார். ஆட்சியர், சிறப்பாக செயல்பட்ட அந்தியூர் வட்டார ஆரம்ப சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். இவற்றை அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அவர்களின் அர்ப்பணிப்பான பணி ஆட்சியரால் பாராட்டப்பட்டது.