ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று நடைபெற்ற கால்நடை சந்தையில், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இதில், காங்கேயம் காளை மாடு ஜோடி ஒரு லட்சத்திற்கும், கொங்கு காளை மாடு ஜோடி 80,000 ரூபாய்க்கும், சிந்து பசுமாடு 40,000 ரூபாய்க்கும், நாட்டு பசு மாடு ஒன்று 50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடைகள் வாங்கப்பட்டு சென்றன.