அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று நடைபெற்ற கால்நடை சந்தையில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. காங்கேயம் காளை மாடு ஒரு லட்சத்திற்கும், கொங்கு காளை மாடு ஜோடி 75 ஆயிரத்திற்கும், நாட்டு பசு மாடு ஒன்று 50 ஆயிரத்திற்கும், ஜெர்சி பசு மாடு ஒன்று 25,000க்கும், சிந்து பசுமாடு ஒன்று 30 ஆயிரத்திற்கும், எருமை மாடு ஒன்று 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி