ஆசனூர் பகுதியில் சுற்றித் திரியும் கரடி

தாளவாடி அடுத்த ஆசனூர் பகுதியில் கோடை கால இலந்தை பழ சீசன் தொடங்கியுள்ளது. கரடிகளுக்கு பிடித்த இலந்தை பழங்களை சாப்பிட ஏராளமான கரடிகள் அங்கு முகாமிட்டுள்ளன. இந்நிலையில், ஆசனூர் சாலையோரம் உள்ள இலந்தை மரத்தில் ஒரு கரடி பழம் பொறுக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். ஆசனூர் வனத்துறையினர், இப்பகுதியில் இலந்தை மரங்கள் அதிகமாக இருப்பதால் கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி