அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற வாழைத்தார் ஏலத்திற்கு 1900 வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தன. இதில் செவ்வாழை, தேன் வாழை, பூவன், ரொப்பஸ்டா உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் ஏலம் விடப்பட்டன. மொத்தம் ரூ 3 லட்சத்து 90 ஆயிரத்திற்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டன.